• Apr 01 2025

முத்துக்குமாருடன் இருந்தது தனிப்பட்ட வன்மமா? பதில் கூறிய ரயான்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அதன் வின்னராக முத்துக்குமரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். 

தற்போது அந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களின் நேர்கானலில் கலந்து வருகின்றனர். அந்தவகையில் ரயான் கொடுத்த பேட்டி ஒன்றில் ஜாக்குலின், முத்துக்குமரன் மற்றும்  செளந்தர்யா பற்றி கூறியுள்ளார்.


அதில் அவர் கூறுகையில், நான் சேரவே கூடாது என நினைச்ச போட்டியாளரில் ஜாக்லினும் ஒருத்தர். அத்துடன் செளந்தர்யாவுடனும் ஜாக்லின் உடனும் நட்பாகி கொள்வேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. பிக்பாஸில் கேம் விளையாடத்தான் போனான் லவ் பண்ண போகேல. தன்னை "லீச் " என்று வெளியில் கேலி செய்தவர்களுக்கு நான் நிரூபிக்க தேவையில்லை என்றார் ரயான்.


மேலும் தான் ஜாக்லின் பற்றி தவறாக கதைக்கவில்லை கேம் பற்றி மட்டும் தான் கதைத்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் தனக்கு முத்துக்குமரன் மீது இருப்பது தனிப்பட்ட வன்மம் இல்லை எனது திறமையை நிரூபித்துக் காட்டும் போது  அதற்கு எதிர்ப்பாக இருந்தது முத்துக்குமரன் மட்டும் தான் என்றார். அத்துடன் இந்நிகழ்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி முத்துக்குமாரனுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement