• Mar 20 2026

சிவகார்த்திகேயன் படத்திற்கு பராசக்தி இல்ல; பரதேசின்னு வையுங்க! யூடியூபர் மாரிதாஸ் காட்டம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் “பராசக்தி”, தொடக்கத்திலேயே பல்வேறு விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இப்படத்தை இயக்குவது சுதா கொங்கரா, நடிகர் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில், பிரபல யூடியூபர் மாரிதாஸ், பராசக்தி படம் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் அதன்போது, “பராசக்தி படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? ஏன் தேர்தல் நேரத்தில இப்படத்தை வெளியிடுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த படத்தை இயக்கும் சுதா கொங்கரா தெலுங்கு. நடிக்கிற நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள். 

இந்த தமிழ் சமூகத்தையும் தமிழ் நாட்டையும் எவ்வளோ கீழ்தரமாக பாக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தைக் கொண்டு பார்க்க முடியும்.படம் எடுக்க இந்தக் கும்பலுக்கு என்ன தகுதி இருக்கு.? இந்தப் படத்துக்கு பராசக்தின்னு பெயர் வைக்காம பரதேசின்னு பெயர் வைச்சா சரியா இருக்கும். ” என்று கூறியுள்ளார். இந்த விமர்சனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement