• Feb 07 2026

Breaking news:- கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து... நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் சூர்யா...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா அவர்கள் கங்குவா படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தினால் நூலிழையில் உயிர் தப்பினார், நடிகர் சூர்யா. இதனால்  ரசிகர்களால் பதறி போய்யுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பார்ப்போம். 


நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 42.இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கிவரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.


வரலாற்று பின்புலத்துடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை ஒட்டி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தின் போது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் நடிகர் சூர்யா.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்புகள் நடைபெற்று கொண்டு இருந்த தருணத்தில் இந்த சம்பவம் நடிப்பெற்றுள்ளது. ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தற்போது நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை  செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement