• Oct 13 2024

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர்..? பெயரே சும்மா கலக்குதே..!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி மவுசு காணப்படுகின்றது. அதிலும் சீரியல்களை புதிது புதிதாக களம் இறங்குவதில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. வித்யாசமான கதைகளத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதிலும் முக்கியமாக அண்ணா, மாரி, நினைத்தாலே இனிக்கும், இதயம், கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். 

சமீப காலமாகவே விஜய் டிவி, சன் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் சரிந்த சீரியல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். மேலும் புதிய சீரியல்களை ஒளிபரப்புவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளிளும் ஈடுபட்டு உள்ளார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் புதிய சீரியல்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது. 


அதன்படி, மகிழ் மீடியா தயாரிப்பில் உருவாக உள்ள இந்த புதிய தொடருக்கு மௌனம் பேசியதே என பெயரிட்டுள்ளார்கள். இந்த தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.

எனினும் இந்த சீரியலில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார் என்ற தகவல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. 


Advertisement