• Jan 19 2025

பாலிவுட்டில் உருவான பெரிய ஆபிஸ்? சூர்யாவுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்த்  திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். 

இந்த நிறுவனம் தற்போது 'வா வாத்தியாரே' 'தங்களான்' மற்றும் 'கங்குவா' ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் கிளை தற்போது மும்பையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா கலந்து கொண்டுள்ளார்கள்.


தற்போது இது குறித்த புகைப்படங்கள் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


அதன்படி ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கிளை மும்பையில் திறந்து திறக்கப்பட்டுள்ளதோடு, அடுத்து பாலிவுட் திரைப்படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement