அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கோமாளி பட இயக்குநரும் லவ் டுடே திரைப்பட நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகியுள்ள dragon திரைப்படம் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.
இப் படத்தில் பிரதீப்புடன் இணைந்து அணுபமா மற்றும் கஜாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு வெளியாகி இரண்டு நாட்களில் 16.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ags நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளதுடன் மீண்டும் இந்த கூட்டணி இணையலாம் என இயக்குநர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதீப் தற்போது பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை தனது x தளத்தில் "வாழ்க்கை என்பது நான் எப்போதும் சொல்வது போல் கணிக்க முடியாதது. உங்கள் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி ஆமிர்கான் சார். வாழ்நாள் முழுவதும் அதைப் போற்றுவேன்." என கூறி பதிவிட்டுள்ளார்.
Life is unpredictable as i always say :) Thankyou for your wonderful words #aamirkhan sir . Will cherish it for life ❤️ pic.twitter.com/HPjpJLvDN2
Listen News!