• Mar 12 2026

அனிமல் பட வெற்றியை தொடர்ந்து பாபி டியோலுக்கு அடித்த ஜாக்பாட்! பிரபல ஹீரோயினுக்கு ஜோடி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் அனிமல். ரன்பீர் கபூர், அணில்கபூர், ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம், படுமோசமாக விமர்ச்சிக்கப்பட்டது. ஆனாலும் இந்த படம்  வசூல் ரீதியில் 900 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இந்த நிலையில், அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாபி டியோல், அடுத்ததாக ஸ்பை யூனிவெர்ஸில் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் இதுவரை வெளியான முன்னணி நடிகர்களின் ஸ்பை கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து ஷிவ் ரவைல் என்பவரால் இயக்கப்படும் திரைப்படம் தான் "YRF SPY UNIVERCE" ஆகும். 


இந்த திரைப்படத்தில் சல்மான் கான், ஷாருக்கான், காட்டினா கபூர் , தீபிகா படுகோன்  என பல முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளதோடு, இதில்  பாபிடியோலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம்.


மேலும், இந்த திரைப்படதில் ஆலியா பட் நெகட்டிவ் ரோலில் நடிக்கின்றார். அவருடன் இணைந்து பாபிடியோல் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. 

தமிழில் சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும்  "கங்குவா" திரைப்படத்தில் பாபி டியோல் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement