• Jan 18 2025

ஒரு நேரத்துக்கு 22 மாத்திர போடுவாரு... இது தான் அவர்ட கடைசி ஆசை! கண்கலங்கி பேசிய சங்கர் குடும்பம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார். கிராமத்து நிகழ்ச்சிகளில்  ரோபோ நடனமாடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்ற இவர், ஸ்டார் விஜய்யின் கலக்கப்போவது யாரு , ஸ்டாண்டப் காமெடி மூலம் பெரிதும் அறியப்பட்டார். பின்பு பல சினிமா படங்களில் காமெடி நடிகராக  நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 

இதை தொடர்ந்து ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கரின் திருமணமானது மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்விற்கு பல சினிமா பிரபலங்களும் வருகை தந்து சிறப்பித்தது மட்டுமின்றி பலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையிலம், பிரபல யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்த ரோபோ சங்கர்,  அதில் பல சோகமான விடயங்களை கண்கலங்கியபடி பகிர்ந்திருந்தனர். 

ரோபோ சங்கர் உடல்நிலை குறைவால் சிறிதுகாலம் சினிமாக்கள் எதிலும் நடிக்காமல் விலகி இருந்தார் என்பது தெரிந்த விடயமே. 


இந்த நிலையிலேயே அவரது மனைவி கூறுகையில்,  அவர் உடல்நிலைக்குறைவால் மிகவும் அவதிப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படுத்த படுக்கையாகவே இருந்தார்.  ஒரு நேரத்துக்கே 22 மாத்திரைகளை எடுத்து கொள்வார்.இவ்வளவு கஷ்டப்பட்டு அவர் மீண்டு வர காரணம் இந்திராவின் கல்யாணமே ஆகும். 

இவளது கல்யாணத்தை பார்க்கவேண்டும்,  பேரக்குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதே இவரது ஆசை என மிகவும் உருக்கமாக கண்கலங்கி கூறியுள்ளார். ரோபோ ஷங்கரின் இந்த விடாமுயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement