• Jan 19 2025

ஊரார் பேச்சை கேட்ட ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை? பரபரப்பின் உச்சத்தில் இனியா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியாவின் டான்ஸ் கம்பெட்டிஷனை பார்ப்பதற்கு பாக்கியா, ஈஸ்வரி ரெடியாகிய பின்பு கிளம்ப தயாராகின்றார்கள். ஆனால் ஈஸ்வரி கட்டிய சாரியை மாற்றி வருமாறு பாக்யா அவருக்கு வேறு சாரி எடுத்துக் கொடுத்து வைக்கின்றார். ஈஸ்வரியும் பாக்கியா ரொம்ப கட்டாயப்படுத்தியதால் அதனை கட்டி வருகின்றார். அதன் பின்பு பாக்கியா அவருக்கு பொட்டும் வைத்து விடுகின்றார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த அமிர்தாவின் அம்மா ஈஸ்வரியை பார்த்துவிட்டு செல்ல வந்ததாக சொல்லவும் பாக்கியா அவரை இருக்க வைத்துவிட்டு காபி போடப் போகின்றார். அந்த நேரத்தில் அவரும் ஐயா இறந்து ஒரு வருடம் ஆகவில்லை அதற்குள் வெளியே போறீங்களா என்று அவரை கஷ்டப்படுத்தி பேசுகின்றார்.


இதனால் ஈஸ்வரி எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே செல்ல, பாக்யா அவருக்கு வந்து திட்டுகின்றார். அதன் பின்பு ஈஸ்வரி சாரியை மாற்றி விட்டு தான் வரவில்லை என்று பாக்கியாவை அனுப்பி வைக்கின்றார்.

இதைத்தொடர்ந்து பாக்கியாவும் இனியாவின் கம்பெட்டிஷனை பார்க்க செல்கின்றார். அங்கு இனியா நல்லா டான்ஸ் ஆடியதோடு இறுதியாக செலக்ட் ஆகிறார். இதை பார்த்து கோபியும் கைதட்டுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement