• Dec 12 2024

பிளேட்டை மாற்றிய பிக் பாஸ்! மன்னிப்பு கேட்ட ஏஞ்சல் டீம்! டென்ஷன் கொடுக்கும் டெவில் டீம்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த ஷோவை கமலஹாசன் ஆரம்பம் முதல் தொகுத்து வழங்கி வந்தார்.  ஆனால் சீசன் 7ல் வாங்கிய அடியே போதும் என்று போய்விட்டார்.


இனி யார் வந்து ஷோவை நிலை நிறுத்துவது என்று விஜய் டிவி, மக்கள் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் நான் காப்பாத்துறேன் என்று வந்தார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது வரையில் இந்த சீசனை அவர் பாணியில் அழகாகதொகுத்து வழங்கி வருகிறார்.  


சுவாரஷ்யமாக ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவின் இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகி உள்ளது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்கின்படி ஏஞ்சல் டீம் ஒரு பக்கமும் டெவில் டிம் ஒரு பக்கமும் விளையாடி வருகின்றது. இதன் போது தர்ஷிகாவுக்கும்  ஜாக்குலினுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


"d_i_a"

அத்தோடு சாச்சனாவை- அன்சிதா நீ குட்டி பிசாசு டி.. நீ குட்டி பிசாசு என்று சாச்சனாவை  பார்த்து கத்தினார். இதனால் வீடு ரணகளமானது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஏஞ்சல் டீம் டெவில் டீமாகவும்  டெவில் டீம் ஏஞ்சல் டீமாகவும் மாறி இருக்கிறார்கள். ஹார்ட் வாங்க வேண்டும் என்பதற்காக பயங்கரமாக கோவப்படுத்த பார்க்கிறார்கள். 


இதனால் கோபப்பட்ட முத்து எதுக்கு சண்டை போடணுமா அதுக்கு சண்டை போடணும் என்று சொல்கிறார். தர்ஷிகா நான் நேற்று பண்ணது தப்பு தான் மன்னிச்சிருங்க என்று சொல்கிறார். அத்தோடு மஞ்சூரி நான் பண்ணது தப்பு நேற்று வன்மமா இருந்தேன் சாரி என்று சொல்கிறார். அதற்கு ஜெபிரி ஐயோ வேணா அது அசிங்கமா இருக்கு என்று சொல்கிறார்.  இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது இனி என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.  







Advertisement

Advertisement