• May 10 2025

பிக்பாஸ் புகழ் மற்றும் சீரியல் நடிகை சேலையில் அழகிய போட்டோஷூட்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி', 'கடைக்குட்டி சிங்கம்', 'ரெட்டை ரோஜா' போன்ற பிரபல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றார்.


இவர் 2020ம் ஆண்டு விஜய் டிவியில் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்டு பல விமர்சனங்களை சந்தித்தார். நிகழ்ச்சியின் பின்னர் இவருக்கு வாய்ப்புகள் பெரிதும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவரது பெயர் வெளியில் தெரியவில்லை 


இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்போது, ஒரு அழகிய சேலையில் எடுத்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement