விஜய் டிவி product ஆக இருக்கும் பிரியங்கா தேஷ் பாண்டே தற்போது காதும் காதும் வைத்தது போல் இரண்டாம் கல்யாணம் செய்துள்ளார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ,கலக்கப்போவது யாரு ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலந்து வரும் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அருமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து வெளியேறினார்.
பிக்போஸினை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது சமையல் கலையை நிரூபித்த இவர் பல திறமைகள் இருந்தும் அவரது சொந்த வாழ்க்கையில் தோல்வியடைந்தார். 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில மன கசப்புகளினால் இருவரும் பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் ஒரு சில மணித்தியாலங்களின் முன்னர் இணையத்தில் கசிந்தது. தற்போது இதனை உறுதிப்படுத்தும் முகமாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் இவருக்கு வசி என்பவருடன் சைலன்டாக திருமணம் நடந்துள்ளதாம் மேலும் இது குறித்து அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பரபரப்பாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!