• Jan 18 2025

அல்யா மனசா இப்படி பட்டவரா ? உண்மையை உடைத்து கூறிய பிக் பாஸ் அர்ச்சனா!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சீசன்7 சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கான "பிக் பாஸ் கொண்டாட்டம்" நிகழ்ச்சியும் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த சீசனுக்கான டைடில் வின்னரே அர்ச்சனா ஆவார். 


விஜய் டிவியில் ஒருகாலத்தில் TRP ரேட்  உச்சத்தில் இருந்த 'ராஜா ராணி' என்ற சீரியலில் நடித்தவரே "ஆல்யா மானசா".  இவறோடு  இணைந்து இந்த சீரியலில் அறிமுகமானவரே தற்போதைய பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா. இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இணைந்து இன்ஸ்டாவில் செய்யும் ரீல்ஸ்களும் பிரபலமான ஒன்றே.  


இந்த நிலையிலேயே பிரபல யூடியூப் தளம் ஒன்றில் பேர்ட்டி ஒன்றை கொடுத்த அர்ச்சனா பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்திருந்தார்.   "அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பி , எனக்கு பல விடயங்களை கற்று தந்துள்ளார், "ராஜ ராணி" என்னுடைய முதலாவது சீரியல் நான் புதுசு ஆனாலும் அவர் எந்த ஈகோவம் இல்லாமல் பல விடயங்களை சொல்லி தந்தார். அதிலும் குறிப்பாக எனக்கு எப்படி சாரி கட்ட வேண்டும் என சொல்லி தந்தவர் அவரே' என மிகவும் மனமுருகி ஆல்யா மானசா பேசியிருந்தார்.

Advertisement

Advertisement