• Apr 01 2025

மொட்டைத்தலையில் 10 கெட்டப்! சூப்பர்ஸ்டார் ரசிகரின் தரமான செயல்! கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ இதோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நடிகர்களில் இன்றும் தனக்கென ஒரு ஆசனத்தை பிடித்து வைத்திருக்கும் ஆக்சன் ஹீரோவே சூப்பர்ஸ்டார் ரஜனிகாந். சிகப்பு தோளோடு இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற ஒரு மிகப்பெரிய கற்பனையை உடைத்து சினிமாவில் கால்த்தடம் பதித்து இன்றளவிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் இருந்து வருகிறார். 80s கிட்ஸ் ,90s கிட்ஸ் ,2k கிட்ஸ் என பல ஜெனரேஷன் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார்.


இவர் தற்போது நடித்து வரும் வேட்டையன் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் ஒரு தனியார் மருத்துவ மனையை திறந்து வைத்ததும் வைரலாகி வந்த நிலையில் தற்போது ரஜனியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த வேலை வரையலாகி வருகின்றது. 


ரஜனியின் புகைப்படத்தை மொட்டைத்தலையுடன் தத்துரூபமாக வரைந்து அதன் மேலே  கடதாசியில் மூலம் ரஜனியின் வெற்றிப்படங்களான அபூர்வ ராகங்கள் ,தளபதி ,பாட்சா ,படையப்பா ,சந்தூரமுகி ,சிவாஜி போன்ற படங்களில் அவர் போட்ட கெட்டப்புகளை வைத்து அருமையான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் . இது ரஜனியின் ரசிகர்களிடம் பெரியளவில் பாராட்டப்பட்டாலும் விஜய் ரசிகர்களுக்கு ட்ரோல் ஆக மாறி உள்ளது.

இதோ அந்த வீடியோ 


Advertisement

Advertisement