• Jun 25 2024

சன்னி லியோனுக்கு விதிக்கப்பட்ட தடை.. பெரும் ஏமாற்றத்தில் கல்லூரி மாணவர்கள்?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான வடகறி, ஓ மை காட், தீ இவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சன்னி லியோன். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

தமிழில் மட்டுமின்றி தற்போது இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகின்றார் சன்னி லியோன். இவர் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.

இவர் ஒரு ஆபாச பட நடிகையாக காணப்படுவதால் இவருக்கு சில கவர்ச்சி நடிகைகள், இவரை படத்தில் நடிக்க வைக்க கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். முன்னணி இந்தி நடிகர்கள் கூட சன்னி லியோனுடன் நடிக்க மறுக்கின்றார்கள்.


இந்த நிலையில், கேரளவில் உள்ள பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருந்த சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜூலை 5ஆம் திகதி சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கேரள பல்கலைக்கழக துணை வேந்த உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement