• Apr 16 2026

பாக்கியாவைத் தவறாகப் பேசியதால் கோபியை அடிக்கப் பாய்ந்த எழில்- கடும் கோபத்தில் ஈஸ்வரி- Baakiyalakshmi Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டில் தனியாக பாக்கியாவும் பழனிச்சாமியும் இருந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த கோபி கண்டபாட்டுக்குத் திட்டுகின்றார். வீட்டில் யாரும் இல்லாதப்போ இவரை தனிய வரவைச்சு கூத்தடிச்சிட்டு இருக்கிறியா, இன்டைக்கு வெளில இருந்து பேசுற, நாளைக்கு ரூமுக்கு கூட்டிட்டு போய் பேசுவியா எனக் கேட்கின்றார்.


இதனால் கடுப்பான பாக்கியா யார் வீட்டில வந்து இந்த மாதிரி பேசிட்டு இருக்கிறீங்க வெளில பாக்கியலட்சுமி வீடு என்று போட்டிருக்கு,அதைப் பார்க்கலையா நீங்க இது என் வீடு வீட்டை விட்டு நீங்க வெளில போங்க,இங்க யார் வரனும் யார் வரக்கூடாது என்று நான் தான் முடிவு பண்ணனும் நீங்க இல்லை, மரியாதையாக வீட்டை விட்டு போங்க எனத் துரத்துகின்றார்.

இப்படியே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதால், பழனிச்சாமி இன்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க நானே போய்க்கிறேன் என்று போகின்றார். இதெல்லாவற்றையும் செழியன் மேல இருந்து பார்த்து விடுகின்றார். தொடர்ந்து பாக்கியா வீட்டில் யோசிச்சுக் கொண்டிருக்கின்றார்.


அப்போது அங்கு மொத்தக் குடும்பமும் வந்தவுடன் கோபி, பாக்கியா தன்னை வீட்டை விட்டுத் துரத்தியதாக ஈஸ்வரியிடம் போட்டுக் கொடுக்க,ஈஸ்வரி பாக்கியாவை அழைத்துத் திட்டுகின்றார்.அப்போது பாக்கியா பழனிச்சாமியை இவர் திட்டியதால் இவரை வீட்டை விட்டு போகச் சொல்லல என்னைப் பற்றி தப்பாக பேசினாரு,


யாரும் இல்லாத நேரத்தில பழனிச்சாமியை கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிட்டு இருக்கிறியா எனத் திட்டினாரு அதான் போகச் சொன்னேன் என்று சொல்ல எழில், எங்க அம்மாவை எப்பிடி இப்பிடிச் சொல்லுவீங்க என அடிக்கப் போகின்றார். இதனால் எல்லோரும் சேர்ந்து எழிலையும் கோபியையும் தடுக்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement