• Oct 09 2024

கணேஷ் விஷயத்தை எழிலிடம் சொல்ல போன பாக்கியா- கோபியின் கடனை அடைக்க ஈஸ்வரி செய்த காரியம்- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா பழனிச்சாமியை வரவழைத்து கணேஷ் திரும்ப வந்த விஷயத்தைச் சொல்கின்றார்.இதைக் கேட்ட பழனிச்சாமி அதிர்ச்சியடைந்தாலும் இந்த விஷயத்தை நீங்க சம்மந்தப்பட்ட எழில் கிட்ட சொல்லுறது தான் நல்லம்.யார் மூலமாகவோ எழிலுக்கு தெரிய வருவதுக்கு முதல் நீங்களே சொல்லி தெரிய வந்தால் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்கின்றார்.


இவ்வாறு பழனிச்சாமியும் பாக்கியாவும் மறைந்து நின்று பார்த்ததைப் பார்த்த கோபி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிப் போகின்றார்.தொடர்ந்து வீட்டில் இனியா காய்ச்சலினால் படுத்திருக்க ராதிகா சென்று பார்த்து விட்டு சாப்பிட்டியா என்று கேட்க,இனியா அம்மா இன்னும் வரவில்லை என்று சொல்ல,ராதிகா தான் கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கின்றார்.

இதை வீட்டுக்கு வந்து பார்த்த கோபி, பாக்கியா ஏன் பொறுப்பில்லாமல் இருக்கிறா இனியாவுக்கு இப்பிடிக் காய்ச்சலாக இருக்கு ஊர் சுத்தப் போய்ட்டா என்று திட்ட, அங்கு பாக்கியா வருகின்றார். அப்போது ஈஸ்வரி பாக்கியாவைத் திட்ட பாக்கியா நான் அமிர்தா கிட்ட சொல்லிட்டு தான் போனேன் அத்தை என்கின்றார்.


இருந்தாலும் கோபி பாக்கியாவிடம் இனியாவுக்கு இப்பிடி காய்ச்சலாக இருக்கு நீ லாம்போஸ்டர் கூட ஊர் சுத்திட்டு வாறியா,என்ன நடக்கப்போகுது என்று எல்லோரும் ஒருநாள் பார்ப்பாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கின்றார். மறுபுறம் கோபி வெளியில் இருக்கும் போது கிரடிட் காட் பணம் கட்டவில்லை என்று வந்து திட்டுகின்றார்கள்.

இதை எல்லாம் கேட்ட ஈஸ்வரி கோபியை தன்னுடைய ரூமுக்கு அழைத்துச் சென்று தன்னுடைய நகைகளை அடைவு வைத்து கடனை அடைக்குமாறு கொடுக்கின்றார்.எப்பிடி இருந்த நீ இப்படி கடன்காரன் ஆகிட்டியேடா என அழ கோபி நகைகளை வாங்காமால் தானும் அழுது ஈஸ்வரியை சமாதானப்படுத்துகின்றார்.


தொடர்ந்து எழிலிடம் பேசுவதற்காக போன பாக்கியா, எழில் நிலா கூட சந்தோசமாக விளையாடுவதைப் பார்த்து எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தயங்குகின்றார். பின்னர் இதனை பழனியிடம் போன் பண்ணி சொல்ல, அவர் நீங்க கட்டாயம் சொல்லித் தான் ஆகனும் என்று சொல்ல,மீண்டும் எழிலை அழைத்து சொல்ல முடியாமல் அனுப்பி வைக்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement