• Jan 18 2025

Breaking news; புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் பாலையா திடீரென மூச்சுத்திணறி உயிரிழப்பு! அதிர்ச்சியில் தமிழ்த்திரையுலகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக திகழ்ந்த ஜூனியர் பாலையா, இன்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்த ஜூனியர் பாலையா, தமிழில் வின்னர், கும்கி, சுந்தர காண்டம், சாட்டை என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த இவருக்கு 70 வயது என்பதோடு, வீட்டில் வைத்தே திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


ஜூனியர் பாலையாவின் மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜூனியர் பாலையாவின் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

தற்போது அவரது உடல், சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement