• May 25 2026

ஜிம்மில் நடிகைகளுடன் ஆர்யா: சாயிஷாவை டேக் செய்து காமெடி செய்த சதீஷ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  சிறந்த திரைக்கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. இவர் கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து ஏரளமான ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ஆர்யா சமீபத்தில் ஜிம்மில் நடிகைகள் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதைக் கண்ட காமெடி நடிகர் சதீஷ், “நான் ஜிம்முக்கு போனால் வந்த வேலையை மட்டும் தான் பார்க்கிறேன்” என்று நகைச்சுவையாக பதிவிட்டு, அந்த பதிவில் ஆர்யாவின் மனைவி சாயிஷாவையும் டேக் செய்தார்.


இந்த பதிவு ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஆர்யாவும் கூடிய விரைவில் சர்ச்சையில் சிக்கப்போகிறார் என எச்சரித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement