• Jun 04 2026

விஜயுடன் அரசியலில் சேர்ந்து பயணிப்பீர்களா.? நடிகர் விமல் சொன்ன பதில்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் மாண விஜய் தஞ்சாவூரில் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்

இதன் போது வழக்கம் போலவே விஜயை பின்தொடர்ந்தவர்களுள் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து தஞ்சாவூரில் செய்திகளை சந்தித்த விமல் இளைஞனின் விபத்து தொடர்பு கருத்து தெரிவித்திருந்தார் அதன்படி, ஒருவர் விரும்பிய நடிகரை பார்க்கும்போது வாகனத்தை பின்தொடர்ந்து உயிரை ஆபத்தில் இட்டுக்கொள்வது தவறானது என்றும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், விஜய் மற்றும் திரிஷா ஒரே காரில் திருமண விழாவில் கலந்து கொண்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த காரை யாரு இப்போ பயன்படுத்துகிறார் என்பது தன்னிடம் தொடர்பில்லாத விஷயம் என நகைச்சுவையாக பதிலளித்தார்.


அத்துடன், விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது குறித்து பேசும்போது, அவர் எம்ஜிஆர் அல்லது விஜயகாந்த் போல பெரிய தலைவராக உயர்வாரா என்பது 2026 தேர்தலுக்கு பிறகே தெரிய வரும் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விமல், விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது விஜயின் அரசியல் பற்றி கேட்கப்பட்டது. 

மேலும் அவருடன் இணைந்து அரசியலில் பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்று நடிகர் விமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தற்போது அப்படியான எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், விஜய் அரசியலில் புதிய பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது முக்கியம் , அவரது அரசியல் பயணத்தை மக்கள் தான் தீர்மானிப்பார்கள், நான் நல்லது பண்ணுவோருக்கு சப்போர்ட் தான் பண்ணுவேன் என்றும் விமல் கூறினார்.

Advertisement

Advertisement