• Mar 10 2026

40 வயசாச்சு..மேட்சிங் புடவையோட வீட்டுலையே இருந்து இருக்கனும்!போட்டுத் தாக்கும் பார்த்தீபன்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் காணப்படுகிறார். இந்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அவர் போட்டியிட உள்ளார்.

எனினும், அவருடைய சினிமா துறையிலும் அரசியல் வாழ்க்கையிலும் மட்டுமின்றி தனிப்பட்ட ரீதியிலும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார். இது அவருடைய அரசியல் நோக்கத்தை பாதிக்குமா என்ற கருத்தும் தற்போது எழுந்து வருகிறது.

மேலும், அவருடைய மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றிற்கு நடிகர் விஜயும் நடிகை திரிஷாவும் ஒன்றாக சென்றதோடு, ஒரே நிறத்தில் ஆடை அணிந்து சென்றதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நடிகை திரிஷாவை குறித்து மேடையில் “குந்தவை வீட்டிலேயே இருக்க வேண்டும்” என கூறிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதற்கு பதிலளித்த திரிஷா, மைக் கிடைத்துவிட்டால் பேசுவது எல்லாம் அறிவாளித்தனமாக ஆகிவிடாது என சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக பதிவிட்டார்.

இதையடுத்து முதலில் மன்னிப்பு கேட்ட பார்த்திபன், பின்னர் வெளியிட்ட வீடியோவில் திரிஷாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேலும், நான் வருத்தம் தெரிவித்திருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும் புதிய வீடியோ ஒன்றில் பேசிய பார்த்திபன், விஜய் பெரிய உயரத்திற்கு வந்துகொண்டிருக்கும் போது, அடுத்து அவர்தான் என்ற அளவுக்கு பெரிய உயரத்தை அடைய போகும் நிலையில், இந்த பெண்மணி என்ன செய்திருக்க வேண்டும்? இந்த பெண்மணிக்கு 40 வயசு ஆகிவிட்டது. 40 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், “நான் வரவில்லை” என்று சொல்லி இருக்க வேண்டும் என கூறினார்.

நிறைய பேர் எனக்கு கால் பண்ணி பேசுகிறார்கள். அதில் ஒரு பத்திரிகையாளர் கூட என்னுடன் பேசும்போது, “விஜய் அவருக்கு மேட்சிங் புடவை வாங்கிக் கொடுத்திருந்தாலும் கூட, அதை கட்டிக்கொண்டு வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும், வெளியே வந்திருக்கக் கூடாது” என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், பார்த்திபனின் புதிய வீடியோ குறித்து நடிகை திரிஷா இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement