• Jan 19 2025

சாலை விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில்.. யாருமே பார்க்கலையா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் நேற்று இரவு சாலை விபத்தில் சிக்கி சுமார் ஒரு மணி நேரம் யாராலும் கவனிக்கப்படாமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடித்தசைத்தான்விமல் நடித்தகன்னி ராசிஉள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி நாயர். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவானஆயிரம் பொற்காசுகள்என்ற திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை சேர்ந்த இவர் நேற்று இரவு கோவளம் பைபாஸ் சாலையில் தனது சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பைக் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருந்ததி நாயர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சாலையில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக அவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த நிலையில் அதன் பிறகு தான் அந்த சாலை வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததால், காவல்துறையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து அவர்களது வீட்டிற்கு தகவல் சொன்னதை எடுத்து தற்போது தனியார் மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயமடைந்து உள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆனாலும் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

 
தமிழ் மலையாளத்தில் நடித்த பிரபலமான நடிகை ஒருவர் சாலை விபத்தில் சிக்கி சுமார் ஒரு மணி நேரமாக மூச்சு பேச்சின்றி நடுரோட்டில் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Advertisement