• Jan 19 2025

திருமணம் விஷயத்தில் அதிர்ச்சி முடிவெடுத்த ஆண்ட்ரியா.. தொடர் ஏமாற்றத்தால் அதிருப்தி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ஆண்ட்ரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபல இசையமைப்பாளர் ஒருவருடனும், பிரபல நடிகர் ஒருவருடனும் கிசு கிசுக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர் திருமணம் செய்து செட்டில் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு 40 வயதாகி விட்ட போதிலும் இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில் திருமண விஷயத்தில் அவர் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஆண்ட்ரியா கடந்த 2005 ஆம் ஆண்டு ’கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’என்ற  திரைப்படம் தான் திரையுலகில் நல்ல ஒரு என்ட்ரி ஆக அமைந்தது.

அதனை அடுத்து ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’விஸ்வரூபம்’ ’என்றென்றும் புன்னகை’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ’பிசாசு 2’உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அடுத்தடுத்து அந்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



திரையுலகில் ஆண்ட்ரியாவுக்கு திருப்திகரமான கேரக்டர் கிடைத்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் அதிருப்தியுடன் தான் இருந்தார் என்று கூறப்படுகிறது. முன்னணி இசையமைப்பாளர் ஒருவரை காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த காதல் முடிவுக்கு வந்ததாகவும், அதன் பின் நடிகர் மற்றும் அரசியல்வாதி ஒருவரை காதலித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த காதலும் நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர் காதல் தோல்வி காரணமாக இனிமேல் திருமணமே வேண்டாம் என்ற முடிவை ஆண்ட்ரியா அடுத்ததாக தெரிகிறது. 25 வயதில் திருமணம் முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் என்பதுதான் ஆண்ட்ரியாவின் கனவாக இருந்தது என்றும் ஆனால் தற்போது காலம் தவறிவிட்டதால் இனிமேல் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறோம், திருமணமே இல்லாமல் தனிமையாகவே வாழ்ந்து விடலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு பதில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஆண்ட்ரியாவின் திருமணம் இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் உறுதி பட தெரிகிறது என்பதால் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement