நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த புதிய திரைப்படமான ‘டீசல்’, நேற்று (அக்டோபர் 17, 2025) திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இந்த படம், தீபாவளி பண்டிகை வெளியீடாக வெளியாகி ரசிகர்களிடம் தனி இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது.
இந்த திரைப்படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, ரமேஷ் திலக் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளிலேயே சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில், தற்போது அதன் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘டீசல்’ திரைப்படம், சமூக அநீதிகள், மற்றும் அரசியல் பின்னணியில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு நகரும் ஒரு ஆக்ஷன் திரில்லர் ஆகும். இதில் ஹரிஷ் கல்யாண் தனது இயல்பான தோற்றத்திலிருந்து மாறி, ஒரு தீவிரமான தோற்றத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவரது தோற்றம், சண்டைக் காட்சிகள் மற்றும் வசனங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
திரைப்படம் வெளியான முதல் நாளே, பல விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பார்வையை பதிவு செய்துள்ளனர். படம் சமூகத்தில் உள்ள தீவிர பிரச்சனைகளை பிரதிபலிக்க முயற்சித்திருந்தாலும், அதன் காட்சிகள் சற்று மனதைக் கவராது இருந்ததாக சில விமர்சனங்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாள், இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து கிடைத்த தகவலின் படி, ‘டீசல்’ திரைப்படம் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா அளவில் சராசரி தொடக்கமாக பார்க்கப்படுகிறது. மேலும், இனி வரும் நாட்களில் படம் அதிகமாக வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!