• Dec 06 2024

வர்ஷினி வெளியேறும் போது கண்கலங்கிய அருண்! இறுதியா கொடுத்த கிஃப்ட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட  இந்த  நிகழ்ச்சியில்  இதுவரை ஆறு பேர் மொத்தமாக வெளியேறி உள்ளார்கள்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனில் இறுதியாக வர்ஷினி எலிமினேட் செய்யப்பட்டார். வழக்கமாக கார்டை காட்டித் தான் எலிமினேஷன் செய்வார்கள். ஆனால் சில வாரங்களாகவே வாள் எடுத்துக்காட்டி எலிமினேஷனை அறிவிக்கும் வகையில் இறுதி டாஸ்க் இருந்தது. அதில் வர்ஷினி எலிமினேஷன் செய்யப்பட்டார்.

விஜய் சேதுபதியின் இந்த முடிவால் கொஞ்சமும் கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லோரிடமும் விடை பெற்று கிளம்பினார் வர்ஷினி. குறிப்பாக அருனிடம் வந்து தான் வரைந்து வைத்த சில படங்களை கொடுத்து நான் வெளியில் வந்து வாங்கிக் கொள்கின்றேன் உன்னை மிஸ் செய்வேன் என அருண் கூறுகின்றார். மேலும் வர்ஷினி கடைசியாக ஒரு பாடலைப் பாடும் போது அருண் கண்களே கலங்கிவிட்டது. இதை அர்ஜுன பார்த்தால் என்ன செய்வார் என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement