• Dec 07 2024

என்மேல் கடுப்பாகி கைய கிழிச்சிக்கிட்டாங்க.. ராதிகாவுக்கு அப்படி மனசு! பாபூஸ் பேட்டி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வில்லனாகவும் குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் தான் பாபூஸ். இவர் தற்போது வரையில் சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் நடித்துக் கொண்டு உள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா பற்றியும் அவருடன் இணைந்து நடித்த சீரியல்களில் ஏற்பட்ட அனுபவம் பற்றியும் பேசி உள்ளார். தற்போது அவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், சினிமாவை பார்த்து வியந்த நடிகர் நடிகைகளில் நான் ராதிகாவையும் சரத்குமாரையும் சொல்லுவேன். ராதிகாவோடு பல சீரியல்களில் நடித்துள்ளேன். அவருக்கு அதிகமாக வில்லன் கேரக்டலையே நடித்துள்ளேன். அதிலும் அரசி என்ற சீரியலில் ராதிகா போலீசாக நடிக்க, பாண்டியர் என்ற கேரக்டரில் நான் நடிச்சேன்.

ஒரு காட்சியில் ராதிகாவின் ரூமுக்கு கோபமாக செல்ல, ராதிகா உனக்கு ஒரு நிமிஷம் டைம் தாறேன்.. அதுக்குள்ள இந்த இடத்தை விட்டு வெளியே போய்விடும் என்று சொல்லுவாங்க.. ஆனால் நான் நீ சொன்னதும் வெளியே போக நான் பயந்தவன் கிடையாது. நான் பாண்டியன் என்று வீர வசனம் பேசி இருப்பேன்.


இதில் நான் ரொம்ப நேரம் பேசியதை கேட்டு கடுப்பான ராதிகா பக்கத்தில் இருந்த கண்ணாடியை ஓங்கி அடித்தார். அந்த கண்ணாடி கையில் குத்தி கையெல்லாம் இரத்தம் வந்தது. அப்ப நீங்க பேசியது எனக்கு அப்படி டெம்ட் ஆகிவிட்டது சூப்பரா பண்ணீங்க என்று என்ன பாராட்டினாங்க. இப்படி எல்லாம் யாரும் செய்வார்களா?

அதன் பின்பு அந்த சீனை சரத்குமார் பார்த்து இவர் நல்லா நடிக்கிறார் நம்ம படத்துக்கு பயன்படுத்திக்கணும் என்று சொல்லி இருக்காங்க. அது எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. சில வருடம் பின்பு சரத்குமார் எனக்கு பட வாய்ப்பு தந்தாரு. அதன் பின்பு ராதிகாவும் நான் பெரிய ஆளா வருவேன் என்று சொல்லி பாராட்டி இருக்காங்க. 

அதற்குப் பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்பு கிடைத்தது. ராதிகா சரத்குமாரின் பெருந்தன்மை வேறு யாருக்கும் வருமா என்று தெரியவில்லை.  ஒரு நடிகரின் உழைப்பை உடனே பாராட்டினாங்க என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement