• Jun 26 2024

அர்ஜுனின் பாதி சொத்து ஐஸ்வர்யாவுக்கா? 500 கோடி எல்லாம் இல்லை? லீக்கான சீக்ரெட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரை உலகில் அடுத்தடுத்து பிரபல நடிகர், நடிகைகளுக்கு திருமணம் நடைபெற்று வருகின்றது. இவர்களின் திருமணங்கள் சிம்பிளாக நடந்தாலும் ரிசப்ஷன் பலரும் வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த பத்தாம் தேதி அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகனான உமாபதி திருமணம் செய்து கொண்டார்கள். 

இந்த நிலையில், தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு அர்ஜுன் கொடுத்த வரதட்சணை பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலா கூறியுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், சென்னை போரூரில் அர்ஜுனுக்கு என்று நிறைய இடங்கள் உள்ளன. ஏன் ஒரு கிராமத்தை அவர் வைத்திருக்கிறார். தனி அப்பார்ட்மெண்ட் எல்லாம் அவரது சொத்தாக தான் உள்ளது.


500 கோடியில் இருந்து 1000 கோடி வரை வரதட்சணையாக கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளன. ஆனால் அது எல்லாம் பொய் இது வழமையாக இணையத்தில் வரக்கூடிய தகவல் தான்.

அர்ஜுனுக்கு ஆண் வாரிசுகள் இல்லை. எனவே அவர் வைத்திருக்கும் சொத்துக்கள் எல்லாமே அவர்களுடைய இரண்டு மகளுக்கும் தான் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் தனது பாதி  சொத்தையே வரதட்சணையாக கொடுத்து விட்டாரா என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement