• Jan 18 2025

Living Together-ல் ஒரே வீட்டுல ஒன்னா இருக்காங்களா? சுடச்சுட வெளியான தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா, வெளியில் வந்த பிறகு தனது காதலனான அருண் அவர்களை நேரில் போய் சந்தித்துள்ள போட்டோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் துணிச்சலான பெண்ணாக காணப்பட்ட அர்ச்சனாவுக்கு, அவருடைய காதலர் அருண் என்பது ஒரு சிலருக்கு தெரிந்து இருந்தாலும், இன்னும் ஒரு சிலர் அர்ச்சனா காதலிக்கிறாரா? யார் அவர்? அப்படி என்று அதிர்ச்சியில் தான் கேட்கிறார்கள்.

சின்னத்திரையில் அர்ச்சனா நடித்திருந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பின்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தார்கள்.


அவர் பிக் பாஸ் வீட்டில் பாயிண்ட் எடுத்துப் பேசுறாங்க, எல்லாம் சரியா பேசுறாங்க, நியாயம நடக்கிறார் என்று தான் அர்ச்சனாவுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

அதிலும், அர்ச்சனாவின் பாடலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கு. பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா எப்போதுமே லவ் பாட்டு தான் பாடிட்டு இருந்தாங்க. அவர் பாடும் போது அதில் ஒரு ஃபீல் இருக்கும்.

அப்பவே எல்லாருக்கும் ஒரு டவுட் இருந்துச்சு. ஒருவேளை அர்ச்சனா லவ் பண்றாங்களா? அவங்க யாரு? வெளியில பேசுறது உண்மைதானா? என்று.


அதாவது அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண்  அவர்களுக்கும் இடையில் காதல் இருக்கு என கிசு கிசுக்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் நிக்சன் ஒரு முறை அர்ச்சனாவிடம், அவருடைய காதல் பத்தி பேசி சண்டையும் போட்டு இருந்தார். ஆனால் அது வெளிப்படையாக காட்டப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது அர்ச்சனா, அருண் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருடை நண்பர்களும் சென்றுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதில் அர்ச்சனா, அருணின் புகைப்படமும் வைரலாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், கியூட் ஜோடி என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.



 

Advertisement

Advertisement