• Sep 09 2024

பென்ஸ் கார்ல வாரவங்க பிற்படுத்தப்பட்டவங்களா? திரையரங்க உரிமையாளர் ஆவேசம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட விநியோகஸ்தராகவும், திரையரங்க உரிமையாளராகவும் காணப்படும் திருப்பூர் சுப்ரமணியன் இன்றைய தமிழ் சினிமா பற்றி பல கருத்துக்களை பகிரங்கமாகவே முன் வைத்துள்ளார்.

அதன்படி அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், இடைவேளை மட்டும் படமா எடுக்குறாங்க. அதற்குப் பிறகு ஜாதி ரீதியான படமா கொண்டு போறாங்க. அதனாலதான் மக்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. நாம எல்லாருமே படிச்சவங்க படிக்காத முட்டாள் கிடையாது. இந்த காலத்தில் யாரும் ஜாதியை பார்த்து பழகுவதில்லை. என்ன ஜாதி என்று கேட்பதில்லை. பைத்தியக்காரன் தான் இது போன்ற ஒரு கேள்வியை கேட்பான்.

அப்படியான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். அவர்களாகவே நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். அப்படி தாம் பிற்படுத்தப்பட்டவர் என மேடையில் பொய் சொல்லிக் கொள்பவர்கள் தான் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ் காரில் வந்து இறங்குகின்றார்கள்.


வெளிப்படையான மக்கள் வாழ்க்கை  என சினிமாவில் காட்டுறிங்க. ஆனால் வெளிப்படையான வாழ்க்கையா நீங்க வாழ்வீர்கள்? பணம் இருக்கறவன் முற்படுத்தப்பட்டவன், பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன். இது இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கும் பேச முடியாது. அப்படியும் பேசினால் இவங்கலே அவனை உட்கார வச்சிடுவாங்க. சினிமா ஒரு தொழில். அதுக்குள் ஏன் ஜாதியை கொண்டு வர வேண்டும்.

எல்லா படமும் பெரிய அளவில் ஒப்பினிங்குடன் ரிலீஸ் ஆவது இல்லை. படம் பற்றி முதல் இரண்டு காட்சியிலே தெரிந்துவிடும். வாழை படத்திற்கு எதிர்பார்த்ததை விட ஓபனிங் பயங்கரமாய் இருந்தது. அதற்கு காரணம் முதல் இரண்டு மூன்று நாட்கள் கிடைத்த விமர்சனம் தான். அதேபோல கொட்டுக்காளி படத்திற்கும் நல்ல ஓப்பனிங் இருந்தது.

ஆனால் மூன்றாவது நான்காவது நாட்களில் கொட்டுக்காளி படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு வாழைப் படத்துக்கு அதிகமான ஷோவ்ஸ் வழங்கப்பட்டன. மக்களுக்கு படம் பிடித்து இருக்கின்றதா இல்லையா என்பது ஒரே காட்சியில் தெரிந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement