• Jan 18 2025

நீ ஒரு ப்ராடுனு உலகத்துக்கே தெரியும்.. என்னோட செருப்பு தரணுமா? விஷாலை வெளுத்து வாங்கிய நடிகை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் திரைப்பட சங்கத் தலைவராகவும் காணப்படும் விஷால் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இந்த சூழலில் நேற்றைய தினம் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் கேரளா திரைப்பட உலகில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விஷால் பதில் அளிக்கையில், அட்ஜஸ்ட்மென்ட் என்று ஒரு நடிகையை யார் அணுகினாலும் அவரை செருப்பால் அடியுங்கள். அந்த துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும். தமிழ் சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கப்படுவது இல்லை என்று சொல்ல முடியாது. இது குறித்து நிறைய புகார்களும் உள்ளன. ஆனால் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் புகார்கள் எதுவும் இல்லை. இருப்பினும் அப்படியானவற்றை விசாரிக்க பத்து பேர் கொண்ட தனிக்குழு அமைக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் அந்த அறிக்கை வரும் என விஷால் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி காட்டமான ஒரு பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


அதாவது வெள்ளை முடி வந்து விட்ட ஆங்கிள் பெண்களைப் பற்றி பேசும் போது உங்கள் நாவை அடக்கி பேசுங்கள். மீடியாவுக்கு முன் நீங்க எச்சரிக்கையாக  நடந்து கொள்ள வேண்டும். பெண்களை பற்றி நீங்கள் உபயோகப்படுத்தும் சொற்கள் கண்டிக்கத்தக்கது. இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு பிராடு என்று தெரியும். மரியாதை உள்ள நபர் என்று உங்களை நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு பைத்தியம் என்பதை பல இடத்தில் நிரூபித்துள்ளீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் இருந்த பெண்கள் அனைவருமே உங்களை விட்டு விலகி விட்டார்கள். உங்களுக்கு நிச்சயம் நடந்தது. பின் அது ரத்த ஆவதற்கு காரணம் என்ன? இப்படி பல கேள்விகள் இருக்கு அதற்கெல்லாம் உங்களால் பதில் கூற முடியுமா? நீங்கள் நடிகர் சங்கத்தில் பெரிய இடத்தில் இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. கர்மா நிச்சயம் உங்களை பின் தொடர்ந்து வரும் என்னிடம் நிறைய செருப்பு இருக்கு அதில் ஒன்று வேண்டுமா? என அந்த பதிவை முடித்துள்ளார். தற்போது இந்த விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement