• Jan 18 2025

உயிர் நீதான்னு சொல்லுவாங்க நம்பாதீங்க..! காதலர்களுக்கு அனுபமா கொடுத்த அட்வைஸ்...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் நிவின்பாளி நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் ஊடக பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காதல் குறித்து சமீபத்திய பேட்டியில் அட்வைஸ் கொடுத்துள்ளார்.


அனுபமா தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடத்துள்ளார். மேலும் அதர்வா முரளியுடன்  தள்ளிப்போகாதே, ஜெயம்ரவியுடன் சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் பைசன், ட்ராகன், லாக்டவுன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் காதல் குறித்து சமீபத்திய பேட்டில் கூறியுள்ளார். 


அவர் கூறுகையில், "எனது உயிர் நீதான், நீயில்லாமல் நான் இல்லை என சொல்லக்கூடிய நச்சுக்காதலில் மாட்டிக்கொண்டு இருப்போர் அனைவரும், தயவு கூர்ந்து அதனை விட்டு ஓடுங்கள் என்பதே எனது அறிவுரை ஆகும். எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என கூறுவதே மிகப்பெரிய பொய் ஆகும்" என பேசினார். எதனால் இப்படி பேசினார் ஒரு வேலை காதலில் இவருக்கும் தோல்வியா என்று ரசிகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அனுபமா கூறிய இந்த விடயம் தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement