• Feb 22 2025

அதிரடியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்த சூரியின் கருப்பன் காளை வெற்றி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெறுவது வழமையான ஒன்று. பாரம்பரியமான இந்த ஜல்லிகட்டை கொண்டாடி வருகிறார்கள்.   இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் நடிகர் சூரியின் கறுப்பன் மாடு வெற்றி பெற்றுள்ளது.


அலங்காநல்லூர் ஜல்லிகட்ட  துணை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உதயநிதியின் மகன் இன்பநிதியும் போட்டியை நேரில் காண வந்திருந்தார். இதில் பங்குபற்றிய 1000 கணக்கான காளைகளுடன் நடிகர் சூரியின் காளையும் பங்கு பற்றியது.ஜல்லிக்கட்டினைக் காண வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூரி வரவில்லையா எனக் கேட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


இந்நிலையில் போட்டியில், நடிகர் சூரியின் காளை, இன்று ஜல்லிக்கட்டில் களமிறக்கப்பட்டது. அப்போது மைக்கில் சூரியின் காளை என சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தியிடம், சூரி கலந்து கொள்ளவில்லையா எனக் கேள்வி கேட்டார்.


அதற்கு அமைச்சர் மூர்த்தி, சூரி வரவில்லை எனக் கூறினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்த சூரியின் காளையை ஒருவரும் பிடிக்க முடியவில்லை. இறுதியில் காளை வெற்றி பெற்றது. இந்த விடயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement