• Jan 18 2025

தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த கேம் சேஞ்சர்! ஒட்டுமொத்த ஸ்க்ரீன்களிலும் மதகஜராஜா

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேம்  சேஞ்சர். இந்த  படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் பின்னர் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் உலக அளவில் சுமார் 6600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதன் முதல் நாள் வசூல் மட்டுமே 223 கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆபீசிலும் நுழைந்தது.

d_i_a

இந்த படம் வெளியாகி தற்போது ஆறு நாட்களைக் கடந்த நிலையில், இந்திய அளவில் 126.5 கோடிகளையும் உலக அளவில் 154.5 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. இந்த படம் வெளியான  போது கிடைத்த வரவேற்பு நாளடைவில் சரிவை நோக்கி நகர்ந்தது.


ஷங்கரின் திரைப்படத்திற்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் முதல் நாள் மதியத்திற்கு பிறகு பெரும்பாலான தியேட்டர்கள் காத்து வாங்கியதாகவே காணப்பட்டது.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் பாடல்களுக்கு மட்டுமே 75 கோடி செலவிடப்பட்டது. மேலும் சமீபத்தில் சங்கர் வழங்கிய பேட்டியில், கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று அவரே கூறிய வீடியோ  வைரலானது.  


இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்துள்ளதாகவும் விநியோகிஸ்தர்களுக்கு 75 வீதம் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த படங்கள் ஓடும் தியேட்டர்களில் தற்போது  சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement