• Aug 12 2026

வரலாற்று பின்னணியில் மீண்டுமொரு ஆக்சன் படம்..! பிரபாஸுடன் இணையும் மிருணாள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடித்து இறுதியாக வெளியான கல்கி 28 98 ஏடி திரைப்படம் 11 00 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இந்த படத்தில் பிரபாஸ் உடன் உலக நாயகன் கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தது.

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கல்கி திரைப்படம் தற்போது 1100 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 


இந்த நிலையில், சீதாராம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடியுடன் மீண்டும் மிருணாள் தாகூர் இணைவதோடு, வரலாற்றுப் பின்னணியில் ஆக்சன் படமாக உருவாகும் இந்த கதையின் நாயகனாக பிரபாஸ் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது சீதாராம் படம் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகியிருந்தது. இந்த படமும் விமர்சன ரீதியாகவும்  வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. 

தற்போது இந்த படத்தின் இயக்குனரான ஹனு ராகவபுடி மீண்டும்  மிருணாளுடன் இணைவதோடு அதில் பிரபாஸ்  இணைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement