• Jun 27 2024

ஊதாரித்தனமாக சுத்துறவங்களை தான் சொன்னேன்.. விஜய் ரசிகர்கள் எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்..!

Sivalingam / 6 days ago

Advertisement

Listen News!

நேற்று தளபதி விஜய் கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த புகைப்படத்தை நடிகை அனிதா சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘சிகிச்சை பெற்று வருபவர்கள் எல்லையில் தீவிரவாதிகளுடன் போரிட்டு நெஞ்சில் குண்டடிப்பட்டவர்களா?  என்று கேலி செய்து செய்திருந்தார்.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அனிதா சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அனிதா சம்பத் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் மீடியாவை அவர் குற்றம் சாட்டியதோடு ’என்னுடைய பதிவு விஜய் குறித்து அல்ல, அவரை நான் எங்கேயும் தவறாக சொல்லவில்லை, அவரது அரசியல் வருகைக்கு உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்’ என்று கூறினார்.

மேலும் மனைவி குழந்தைகளை கவனிக்காமல் ஏழையாக இருந்த போதிலும் பணத்தை கள்ளச்சாராயம் குடிக்கிறேன் என்று செலவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தியாகி மாதிரி உங்களைப் போன்ற மீடியாக்கள் பதிவு செய்ததைத்தான் எனது பதிவில் சுட்டுக் காட்டி இருந்தேன் என்றும் விஜய் குறித்து நான் தவறாக கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

உலகத்தில் எத்தனையோ அப்பாக்கள் சிறுக சிறுக சேமித்து தங்கள் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியும் சிலர் ஊதாரித்தனமாக கள்ளச்சாராயத்திற்கு செலவு செய்பவர்களை தான் நான் குறிப்பிட்டேன் என்றும், என்னை பொருத்தவரை இறந்தவர்களை பாவம் என்று சொல்வதைவிட , அவர்களுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் தான் பாவம், அவர்களுக்கு கடவுள் தான் மனவலிமையை அளிக்க வேண்டும்’ என்றும் என்னுடைய பதிவை உண்மையாக புரிந்து கொண்டவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். அனிதாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement