இந்தியா தாண்டி உலகெங்குக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய திரைப்படமான கல்கி கி.பி 2898 இன் திரையிடலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அடுத்தடுத்து வரும் அப்டேட் ரசிகர்களுக்கு கல்கி திரைப்படத்தின் மீதான எதிர்பார்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
பான் இந்திய ஸ்டார் பிரபாஸின் நடிப்பிலும் வெளிவரவிரவிருக்கும் படத்தில் இந்திய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். காவிய அறிவியல் புனைகதைத் திரைப்படமான இப் படத்தை திரையில் காண அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.
படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்வுகள் மும்பையில் பெரும் வரவேற்புக்கு மத்தியில் நடந்தேறியிருக்க இன்று மாலை வெளியாகிறது அடுத்த அப்டேட்.அதாவது பைனல் வார் என பெயரிடப்பட்டிருக்கும் கல்கி படத்தின் அடுத்த ட்ரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.
Prepare for the Future!!!
— Kalki 2898 AD (@Kalki2898AD) June 20, 2024
The Release Trailer of #Kalki2898AD out Tomorrow at 6 PM.@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth #Kalki2898ADonJune27 pic.twitter.com/nCTKbVya3I
Listen News!