• May 15 2026

கேரளா ஷூட் முடிந்தது.! ‘மைசா’ அவதாரம் பற்றி ராஷ்மிகாவின் அதகள பதிவு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, இன்று பான்-இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர தயாராகியுள்ளார். ‘மைசா’ என்ற புதிய படத்தில், போர்வீராங்கனை தோற்றத்தில் அவர் நடித்து வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திர புல்லே இயக்கும் இந்த படத்தில், ராஷ்மிகா இதுவரை செய்யாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவே படத்தின் ஸ்கேலை காட்டிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஹைப் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘மைசா’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு கட்டம் கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளதாக ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

அதன்படி அவருடைய பதிவில், “நீண்ட கால ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த படத்திற்கு உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கடினமான சண்டைக் காட்சிகளுக்காக தன்னை தயாராக்கிய ஸ்டண்ட் குழுவினருக்கும் தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.

‘புஷ்பா 2’ மூலம் கவனம் பெற்ற தாரக் பொன்னப்பா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.

காதல் கதாநாயகியாக இருந்து ஆக்ஷன் ஹீரோயினாக மாறும் ராஷ்மிகாவின் இந்த புதிய முயற்சி, அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement