யூடியூப் உலகில் பிராங்க் ஷோக்கள் மூலம் தனித்துவமான பாணியில் ரசிகர்களை கவர்ந்தவர் VJ பார்வதி. பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று தைரியமாகவும் நகைச்சுவையுடனும் கேள்விகள் கேட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் குறுகிய காலத்திலேயே பெரிய அளவிலான ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். அவரது எளிமையான அணுகுமுறையும் இயல்பான பேச்சும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது.

யூடியூப்பில் பெற்ற பிரபலத்தைக் கொண்டு அவர் Cooku with Comali நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. அங்கு தனது உற்சாகமான நடிப்பாலும், நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை மேலும் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து Bigg Boss நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக ‘ரெட் கார்ட்’ மூலம் வெளியேறிய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வி.ஜே. பார்வதி, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “உருகியதே எனதுள்ளம்..” என்ற பாடலை பின்னணியாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி மற்றும் அழகான வெளிப்பாடு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் கமெண்ட்களில் அவரது எக்ஸ்பிரஷன்களை பாராட்டி வருகின்றனர். இதன் மூலம், சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஒரு முறை வி.ஜே. பார்வதி ட்ரெண்டாகி வருகிறார்.
Listen News!