• May 15 2026

நான் சாப்பிடுற சோறு அவர் போட்ட பிச்சை! - ஆர்.பி. சௌத்ரி மறைவால் கதறி அழுத இயக்குநர்

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கிய R. B. சவுத்ரி அவர்களின் திடீர் மறைவு திரைத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஜீவா அவர்களின் தந்தையான அவர், பல மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்து தனக்கென ஒரு பெரும் அடையாளத்தை உருவாக்கியிருந்தார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த அவர், பல இளம் இயக்குநர்களுக்கு முதல் வாய்ப்பை வழங்கியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். குறிப்பாக ‘புது வசந்தம்’, ‘பூவே உனக்காக’, ‘சூரிய வம்சம்’ போன்ற படங்கள் அவரின் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், அவரது மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் விக்ரமன் பகிர்ந்துள்ள உணர்ச்சி மிகுந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. “40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் கனவுடன் சென்னை வந்த போது பல இடங்களில் வாய்ப்பு தேடி தவித்தேன். அப்போது எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் ஆர்.பி. சௌத்ரி சார் தான். இன்று நான் சாப்பிடும் உணவு கூட அவர் கொடுத்த பிச்சை” எனக் கூறியுள்ளார்.

அவரது இந்த வார்த்தைகள், சௌத்ரி அவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை உருவாக்கியவர் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. அவரின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement