• May 06 2026

சத்தமில்லாமல் வேலை காட்டும் சிவகார்த்திகேயன்! 'சேயோன்' பட போஸ்டரில் ஒளிந்திருக்கும் க்ளூ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல முக்கியமான படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், அவரது அடுத்த பட அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தை கமல் ஹாசன் அவர்களின் Raaj Kamal Films International மற்றும் Turmeric Media இணைந்து தயாரிக்கின்றன. ‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் – கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தை ‘தாய்க்கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்கிறார். தனித்துவமான இசைக்காக அறியப்படும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திலும் புதிய அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.


இந்நிலையில், நடிகை பாக்யஸ்ரீ போர்சே அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘சேயோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் கதைக்களம் மற்றும் முதல் லுக் குறித்து மேலும் அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement