• Jul 13 2026

நல்லவேளை ஸ்டாலின் தோற்றார்.. விஜய்க்கு முன்னால் ஸ்டாலின் அமருவதா? ஜேம்ஸ் வசந்த்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் குறிப்பிடத்தக்கதாக பேசப்படுவது M. K. ஸ்டாலின் அவர்களின் தோல்வி. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ஸ்டாலின் போன்ற தலைவரின் இந்த தோல்வி, அவரது ஆதரவாளர்களை மட்டும் அல்லாது பல பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அதாவது, “முதல் முறையாக திராவிட சித்தாந்தத்தின் மத்தியில் எந்த கொள்கையும் இல்லாத ஒரு நடிகனுக்கு வாக்கு அளித்தது வருத்தமாக உள்ளது. நல்ல வேளை ஸ்டாலின் தோல்வியடைந்தார். 

இல்லையெனில், சட்டசபையில் முதல்வர் நாற்காலியில் விஜய் அமர, அவரது முன்னிலையில் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக அமர வேண்டிய நிலை உருவாகியிருக்கும். அது அவரது 75 வருட அரசியல் மரபை குறைத்து காண்பிக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பல்வேறு எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக விஜய் ஆதரவாளர்கள் இந்த கருத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement