• Jan 19 2025

நடிச்ச படமெல்லாம் முடங்கியிருக்கு.. சினிமாவை விட்டு விலக ஆண்ட்ரியா முடிவா?

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 நடிகை ஆண்ட்ரியா நடித்த ’பிசாசு 2’ உள்பட ஒரு சில படங்கள் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருப்பதை அடுத்து அவர்  நடிப்பிலிருந்து விலகி விட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாக்காக வருகை தந்திருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். குறிப்பாக விஜய் அரசியல் வருகை குறித்து கேட்டபோது ’அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம்’ என்று அவர் நாகரீகமாக தவிர்த்து விட்டார்.

இதனை அடுத்து நீங்கள் நடித்த படங்கள் இப்போதைக்கு வெளியாகவில்லையே? நடிப்பிலிருந்து விலகி விட்டீர்களா? என்று கேட்டபோது ’நான் ஏன் விலகப் போகிறேன், அப்படியே விலகினாலும் உங்களுக்கு என்ன? என்று அவர் பதில் கூறியது செய்தியாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  



நடிகை ஆண்ட்ரியா நடித்த முடித்துள்ள ’பிசாசு 2 ’ரிலீஸ் க்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒரு சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் இந்த படமும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை.

மேலும் ஆண்ட்ரியா நான்கு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் அந்த படங்களின் படப்பிடிப்பும் இன்னும் தொடங்கவில்லை. இதனால் நடித்த படங்களும் வெளியாகவில்லை, நடிக்க கமிட்டான படங்களும் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருக்கும் ஆண்ட்ரியா, சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் சொந்த தொழில் தொடங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.  

Advertisement

Advertisement