• Jan 19 2025

பாம்புன்னா கொத்த தான் செய்யும்.. வடிவேலுவை அசிங்கமாக திட்டிய நடிகை ஆர்த்தி..

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு நடிப்பு திறமை இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் பல சக நடிகர்களுக்கு தொல்லைகள் கொடுத்திருப்பதாகவும் பலருடைய வாய்ப்பை தட்டிப் பறித்து உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் தற்போது நடிகை ஆர்த்தியும் வடிவேலு மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வடிவேலுவுடன் ஒரு காட்சியில் ஆர்த்தி நடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது ஆர்த்தியை கூப்பிட்டு ’நீ நன்றாக நடிக்கிறாய், என்னை விட சூப்பராக நடிக்கிறாய் என்று என்னிடம் பாராட்டு தெரிவித்துவிட்டு, அதன் பின்னர் இயக்குனரை கூப்பிட்டு என்னைவிட நன்றாக நடிக்கும் இந்த நடிகை நம்ம படத்திற்கு தேவை இல்லை, இவரை மாற்றி விட்டு வேற நடிகை போடுங்கள் என்று கூறி தன்னுடைய வாய்ப்பை கெடுத்து விட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்த்தி கூறியுள்ளார்.

இதேபோல் தான் தன்னுடைய கணவர் கணேஷ்  வடிவேலு நடித்த 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இருந்த நிலையில்  கணேஷ் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று வடிவேலு கூறிவிட்டதால் அவர் நீக்கப்பட்டதாகவும் ஆர்த்தி கூறியிருந்தார்.  பொதுவாக சக நடிகர், நடிகைகள் நன்றாக நடித்தால் தான் நமக்கு போட்டியாக இருக்கும் என்று தான் திறமையான நடிகர்கள் கருதுவார்கள்.

ஆனால் நடிகர் வடிவேலு மட்டும் தன்னைவிட வேறு யாராவது நன்றாக நடித்துவிட்டால் அவர்கள் தன்னுடன் நடிக்க கூடாது என்ற கீழ்த்தரமான கொள்கை உடையவர் என்றும் பாம்பு என்றால் கொத்தத்தானே செய்யும், அதனால்  அவருடைய குணத்தை  மாற்றவே முடியாது என்றும் எனவே அவருடைய படத்தில் நடிப்பதை நாங்களே கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.  

வடிவேலு மீது ஏற்கனவே சிங்கம் புலி உட்பட பல நடிகர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது ஆர்த்தியும் அவர் மீது குற்றச்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisement

Advertisement