• Jul 27 2026

அரசியலில் புதிதாக வந்த விஜய்… பொறாமையை ஓப்பனாக வெளிக்காட்டிய ஆந்திர துணை முதல்வர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய் பற்றிய கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அதில் அவர், “தமிழ்நாட்டு அரசியலில் சிலர் மிகவும் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். அதை பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார். மேலும், விஜய் அரசியலில் இறங்கிய பிறகு ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்டு, கட் அவுட்கள் போன்ற பிரச்சார முறைகள் மூலம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர் முதல்வராகிவிட்டார் என்றார்.


மேலும், தாம் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் பயணத்தில் ஈடுபட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய மற்றும் விரைவான அரசியல் வெற்றியை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

விஜய் சமீபத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, தனது புதிய அரசியல் கட்சியின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பவன் கல்யாணின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement