• Sep 09 2024

அந்தகன் மிகப்பெரிய மேஜிக் செய்துள்ளது..! பாராட்டி தள்ளிய வலைப்பேச்சு அந்தணன்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த திரைப்படம் தான் அந்தகன். இந்த திரைப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், யோகி பாபு  உள்ளிட்டவர்கள்  லீட் கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், தியாகராஜன் - பிரசாந்த் கூட்டணியில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில் அந்தகன் திரைப்படம் அனைத்தையும் மீறி வெற்றி நடை போட்டு வருவதாக  வலைப்பேச்சு அந்தணன் பாராட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த படம் பிரசாந்திற்கு மிகப்பெரிய மாஸ்  ரீ என்ட்ரியாக அமைந்துள்ளது. தியாகராஜன் இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என நினைக்கவில்லை. தன்னுடைய கணிப்பை தியாகராஜன் பொய்யாக்கியுள்ளார்.

தன்னுடைய படங்களில் தனது மகனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தியாகராஜன், இந்த படத்தில் அப்படி இல்லாமல் ஏனைய நடிகர், நடிகைகளுக்கும் சரியான ஸ்பேசை  கொடுத்துள்ளார்.


இந்த படத்தில் பிரசாந்தை காட்டிலும் சிம்ரன் அதிக ஸ்கோர் செய்துள்ளார். சில இடங்களில் சிம்ரனிடம் அடிவாங்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை.

மேலும் தான் ஏற்கனவே வழங்கிய பேட்டியில் கோட் படத்திற்கு பிறகு அந்தகன் வெளியாகி இருந்தால் விஜயுடன் பிரசாந்த் நடித்த படம் வெற்றி பெற்று இருக்கும் என்று கூறினேன். ஆனால் தற்போது தன்னுடைய கணிப்பையும் அந்தகன் படம் பொய்யாக்கி மிகப்பெரிய மேஜிக்கை செய்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement