• Jan 19 2025

குக் வித் கோமாளியின் இந்த வார எலிமினேஷன் யாரு தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் குக் வித் கோமாளி. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் சமையல் தெரியாத ஒருவரை கோமாளியாக இறக்கி அவர்கள் கொடுக்கும் தொல்லைகளுக்கும் நடுவில் சமாளித்து சமைத்து முடிக்க வேண்டும் என வித்தியாசமான டாஸ்க் வைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதற்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட்டும் தாமுவும் இருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி  ஐந்தாவது சீசனில் இருந்து விலகி இருந்தார்.


எனினும் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் புதிய நடுவர், புதிய போட்டியாளர்கள், கோமாளிகள் எனப் படு பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் இருந்து இறுதியாக ஷாலினி ஜோயா வெளியாகி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதால் குக் வித் கோமாளி எலிமினேஷன் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என மாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வாரம் டேஞ்சர் சோனில் பூஜா, அக்ஷய் கமல் மற்றும் இர்பான் ஆகியோர் இருந்துள்ளார்கள். இதில் பூஜா எலிமினேட் ஆகி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement