• Oct 13 2024

காட்டுல காத்து வாங்கும் எமி ஜாக்சன்.. ஆனா இதெல்லாம் பண்ணுறாங்களே.! க்யூட் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை தான் எமி ஜாக்சன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் லண்டன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் முடிந்தது.

2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் எமி ஜாக்சன். இவர் அந்த படத்தில் இங்கிலாந்து ராணி போல் சுமார் அம்சமாக நடித்திருப்பார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தெறி, தங்கமகன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து இருந்தார். இறுதியாக அருண் விஜயுடன் இணைந்து மிஷன் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.


ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன எமி ஜாக்சன் தற்போது மகன் ஒருவர் இருக்கும் நிலையில், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாற கடந்த இரண்டு ஆண்டாக அவரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது காட்டுக்குள் போட்டோகிராபராக மாறி அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அத்துடன் அமைதியான சூழலில் காட்டுல காத்து வாங்குற மாதிரி தனது காதலருடன் என்ஜாய் பண்ணி வருகின்றார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Advertisement