• Sep 10 2024

டிமான்டி காலனி 2 படத்தின் மூன்றாவது திகில் பாடலும் ரிலீஸ்! எகிறும் எதிர்பார்ப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டிமான்டி காலனி 2.

இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதற்கு சாம் சிஸ் இசை அமைத்துள்ளார். தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகின்றது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக காட்சிகள் இருந்துள்ளதோடு திகில் நிறைந்த  கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், டிமான்டிக் காலனி 2 படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் மூன்றாவது பாடலும் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு  யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது . இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீசாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement