• Aug 24 2025

இந்த படம் சத்தியமா தேறாது.. தலையை தூக்கிடாத தளபதி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் மூன்றாவது ஸ்பார்க் பாடல் சற்றுமுன்னர் வெளியாகி இருந்தது.

யுவன் சங்கர் ராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய ஸ்பார்க் பாடல் வரிகள் வெளியாகி அந்தப் பாடலை லிரிக் வீடியோவை சிறப்பாக உருவாக்கி இருந்தார்கள். அதில் முடிந்தவரை டீ ஏஜிங் விஜயை காட்டாமல் வெறும் போட்டோக்களில் மட்டுமே காட்டி எஸ்கேப் ஆகி இருந்தனர். இந்த பாடலை ரசிக்க கூடிய வரவே காணப்படுகின்றது.

கோட் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில், இந்தப் பாடல் சார்ட்பஸ்டர் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில், கோட் படத்திலிருந்து தற்போது வெளியான தர்ட் சிங்கிள் பாட்டில் அதில் விஜயின் டி ஏஜிங் லுக் படுமோசமாக இருப்பதாகவும், வெங்கட் பிரபுவின் ஹீரோ ஒரு அனிமேஷன் பொம்மையாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் அஜித், ரஜினிகாந்த் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றார்கள்.


மேலும் குறித்த பாடலில் விஜய் நடனமாடும் போது அவரின் தலை குனிந்தபடியே ஆடுவது போல காட்டியுள்ளார்கள். ஒரே ஒரு செகண்ட் மட்டுமே விஜயின் முகத்தை காட்ட டி ஏஜிங் சரியில்லை என்றும் தலையை மட்டும் தூக்கிடாத என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றார்கள்.

அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு கோட் படத்தை முடித்துவிட்டு அஜித்தை சந்திக்கும் போதே தெரியும் விஜய்யை காலி பண்ணவே இந்த படத்தை எடுத்துள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றார்கள். மேலும் கோட் படத்தின் நிலைமை என்ன ஆகும் என்கின்ற கேள்வி எதுவும் பண்ணாமலே விஜய் ஷூட்டிங்லையே ஜங்காத்தான் இருந்தார் அப்படியே நடிக்க வைத்திருக்கலாமே என்றும் இந்த படம் சத்தியமா தேறாது எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement