• Nov 23 2024

அம்மா சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் மறைவு.. மலையாள திரையுலகில் பேரதிர்ச்சி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் 80 மற்றும் 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் டிபி மாதவன். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

1960 ஆம் ஆண்டுகளில் ஆங்கில பத்திரிகைகளில் வேலை செய்த இவர், தன்னுடைய 40 வயதில் தான் சினிமாவில் கால் பதித்தார். அதன்படி 1975 ஆம் ஆண்டு வெளியான ராகம் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த இவர் அதற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். மலையாளத் திரை உலகின் நடிகர் சங்க அமைப்பாளராக அம்மாவின் முதல் பொதுச் செயலாளராக இவர் காணப்பட்டார். இவரது பதவி காலத்திலேயே பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்.


இதைத்தொடர்ந்து சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கும் போது பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார். ஆனாலும் இவருக்கு திடீரென ஞாபக மறதி நோய் ஏற்பட்டது. இதன் காரணத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த மாதவன், 88 வயதில் தனி அறையில் இருக்கும் பொழுது இயற்கையை எய்தியுள்ளார். இவரது மறைவு  திரை உலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவரது மறைவிற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement